பொலிஸ் அறிவிப்பாக வாட்சப்பில் பரவும் செய்தி போலியானது!
“அனைவரும் படிக்க வேண்டிய பொலிசாரின் செய்தி.
கவனமாக இருங்கள்..! பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதில் நாம் பொறுப்புள்ள பிரஜைகளாக இருக்க வேண்டும். அத்தோடு, நம்மையும் நமது உடமைகளையும் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.
நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ, இந்த நாட்களில் பலர் அதிகம் சம்பாதிப்பதில்லை, அதனால் வேலை இழப்புகள் / வணிக பாதிப்புகள் உங்களுக்கு திடீர் நிகழ்வாக இருக்கலாம்.
1. வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள், பெண்கள் / சிறுவர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் பெண்கள் / ஆண்கள் உட்பட அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2. விலை உயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.
3. விலை உயர்ந்த கழுத்தணிகலன், வளையல்கள், காதணிகள் மற்றும் உங்கள் கைப்பைகளை அணியாமல் கவனமாக இருங்கள்.
4. ஆண்கள் விலையுயர்ந்த கடிகாரங்கள், விலையுயர்ந்த காப்புகள் மற்றும் அணிகலன்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
5. உங்கள் மதிப்புமிக்க கையடக்கத்தொலைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள். பொது இடங்களில் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்துவதை குறைக்க முயற்சிக்கவும்.
6. வாகனத்தில் அந்நியர்களை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கவும்.
7. தேவைக்கு அதிகமாக பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்.
8. நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் வங்கி கடனட்டை மற்றும் வரவட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
9. உங்கள் வீட்டிலுள்ள மூத்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தெரிந்துகொள்ள அடிக்கடி வீட்டாருடன் உரையாடுங்கள்.
10. பெரியவர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களை, அழைப்பு மணி ஒலிக்கும் போது, பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறு அறிவுறுத்துங்கள். முடிந்தால், பொதிகள் அல்லது கடிதங்களைப் பெற கிரில்லை அணுகுவதைத் தடுக்க கிரில் கதவுகளைப் பூட்டுங்கள்.
11. குழந்தைகளை சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்துங்கள்
12. வீட்டிற்குச் செல்ல தனிமைப்படுத்தப்பட்ட சாலைகள் அல்லது குறுக்குவழிகளில் செல்ல வேண்டாம். முடிந்தவரை பிரதான பாதையில் செல்ல முயற்சிக்கவும்.
13. இளைஞர்களே, நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் சுற்றுப்புறம் தொடர்பாக அவதானமாக இருங்கள்.
14. எப்போதும் அவசர அழைப்பிற்கு ஒரு தொலைபேசி எண்ணை கைவசம் வைத்திருக்கவும்.
15. மக்களிடமிருந்து சிறிய பாதுகாப்பான இடைவெளியை வைத்துக்கொள்ளுங்கள்.
16. மக்கள் பெரும்பாலும் முகக் கவசங்களை அணிவார்கள். அதனால் ஆட்களை எளிதில் அடையாளம் காண்பது கடினம்.
17. வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி சொல்லுங்கள்.
18. முடிந்தவரை பொதுப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
19. முடிந்தவரை நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்.
20. உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையான நேரத்தைப் பயன்படுத்தவும், முடிந்தவரை பிரதான சாலையைப் பயன்படுத்தவும்.
வெறிச்சோடிய தெருக்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்கவும்.
21. குழந்தைகள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால், பெரியவர்கள் அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
22. உங்கள் வாகனத்தில் விலையுயர்ந்த பொருட்களுடன் எதையும் விட்டுசெல்லாதீர்கள்.
இது குறைந்தது 3 மாதங்கள் அல்லது நிலைமை மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.
நீங்கள் விரும்பும் அனைவருடனும் இதை பகிரவும்.
உங்கள் பகுதியில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நமது நாட்டு மக்களின் நலனுக்காக இவ்வறிவிப்பை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கவனமாக இருங்கள்
~ பொலிஸ்…. ” என்று ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.
இந்த செய்தி தொடர்பில் நாம் ஆராய்ந்ததில், பொதுமக்களுக்கு இவ்வாறானதொரு செய்தியை வெளியிடவில்லை என இலங்கை பொலிஸ், ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளமை தெரியவந்தது.
இலங்கை பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகள் ஏதும் இருந்தால், பொலிஸ் ஊடகப் பிரிவினால் ஊடக அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
எனவே, பொலிஸ் அறிவிப்பாக வாட்சப்பில் பரவும் செய்தி இலங்கை பொலிசாரினால் வெளியிடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.