திருகோணமலை மூதூர் 64ம் கட்டை ராஜவந்தான் மலைக்கு சென்ற தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்!
"எமது பழமைவாய்ந்த வரலாற்று சான்று உள்ள இந்த ராஜவந்தான் மலையை மேலே சென்று பார்ப்பதற்கு பிள்ளைகள் பெற்றாரை அங்கு அழைத்து சென்றோம்.
அமைதியாக சென்று கொண்டிருந்த வேளை அங்கிருக்கும் பௌத்த மதகுருவானவர் வீதிக்கு முன்வந்து மேலே செல்ல விடமாட்டேன் என்று கூறி எங்களை மறித்தார்.
அதன் நிமித்தம் மக்களையும் மதகுருவான எங்களையும் தள்ளி தொலைபேசியை பறித்து வீசியும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன் இனரீதியான வன்ம வார்த்தைகள் பேசி எங்களை அச்சுறுத்தினார்.
எமது மக்கள் அவரின் தடையை பொருட்படுத்தாது மேலே சென்று பார்வையிட்டு இயற்கையான இறைவனை வழிபட்டு மீண்டும் அமைதியாக மாணிக்கவிநாயகர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தோம்.
இத்தனைக்கும் பொலிசாரும் புலனாய்வு பிரிவினரும் அவ்விடத்தில் நின்று பார்வையிட்டு படங்களை எடுத்தவண்னம் நின்னர். நான் அணிந்து சென்ற செருப்பை கூட பௌத்த மதகுருவானவர் எடுத்துக் கொண்டு தர மறுத்துவிட்டார்.
இன்றுவரை நாம் பிறந்து வாழ்கின்ற இந்த நாட்டில் எமது மதஉரிமை, கௌரவம் மீறபடுகின்றமை தொடர்கதையாக உள்ளது.
ஏனைய மதகுருவை மதிக்கத் தெரியாத மதகுருமார் எப்படி மக்களை மதிப்பார். இந்த நாட்டில் எப்போது இனமதவாதம் இல்லாமல் போகும் இறைவனே தீர்ப்பு."

.jpeg)