Header Ads

Breaking News
recent

திருகோணமலையிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


(அப்துல்சலாம் யாசீம்)
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது.

மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்பதை கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (28) திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக நீதிமன்ற வீதியினூடாக தபால் அலுவலகம் வழியாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்தது.

கோட்டா நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு அமெரிக்காவுக்கு நீ ஓடு

மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்து

இட்டுகம நிதியின் மிகுதி 1.5 மில்லியன் எங்கே போன்ற ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.