Header Ads

Breaking News
recent

அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயல்படுவோம்


தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் ,அது தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளுமாறும், சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று இவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்காண்டனர்.
Powered by Blogger.