மட்டக்களப்பிலும் வெடித்தது மாபெரும் மக்கள் போராட்டம் : தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் பிள்ளையானின் (எம்பி) வீடு முற்றுகை
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் மக்கள் போராட்டம் மட்டக்களப்பிலும் வெடித்ததுள்ளதுடன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையிலான ஆர்ப்பாட்டக் குழுவினால் அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எம்பியின் அலுவலகம் மற்றும் வீடு என்பன முற்றுகையிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி எனும் பெயரில் மக்களைச்சுரண்டி இந்த நிலைக்கு மக்களைக் கொண்டு வந்தவர்கள் துரத்தப்பட வேண்டுமென்ற கோசத்தை மக்கள் முன்னெடுத்துள்ளதுடன், மக்கள் தற்பொழுது அனைத்தையும் உணர்ந்துள்ளார்கள்.
இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
.jpeg)

