Header Ads

Breaking News
recent

திருமலை ஹொரவ்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் மரணம்...



திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


குறித்த விபத்து இன்று (19) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.




விபத்து தொடர்பில் தெரியவருவதாவது 

திருகோணமலையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளதுடன் அதே குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு விபத்தில் உயிரிழந்த சிறுவன் ஹொரவ்பொத்தானை, விலேவெவ பகுதியைச் சேர்ந்த கௌசித ஹஸ்ரால் (வயது - 05) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 





இதேவேளை உயிரிழந்த சிறுவனின் தாயும் தந்தையும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.