Header Ads

Breaking News
recent

அவசர காலச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்


அவசர காலச் சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாம் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கும். சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Powered by Blogger.