Header Ads

Breaking News
recent

நாளை அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தம்....



இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.


திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


வேலை நிறுத்தப் போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும்  வேலைநிறுத்தம் காரணமாக அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது.


அரச, அரை அரசு, பொது மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் வங்கித் துறை வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளது.

Powered by Blogger.