கிணற்றில் இருந்து மீட்ட அரிய வகை சிறுத்தை பூனை...
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் அரிய வகை சிறுத்தை பூணை ஒன்று கினற்றில் இறுந்து மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு தினைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
திருகோணமலை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இன்று (04) மாலை கிண்ணியா பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த இவ் அரிய வகை பெரிய சிறுத்தை பூணை ஒன்றை மீட்டுள்ளனர்.
இந்த அரிய வகை சிறுத்தை பூணை நாட்டில் அழித்து வரும் இனமாக கருதப்படுவதுடன் இவ்வாறு மீட்கப்பட்ட இவ் அரியவகை சிறுத்தை பூணை இன்று மாலை கிண்ணியா வனப்பகுதியில் விடப்படும் என திருகோணமலை வன விலங்குகள் ஜீவராசிகள் பாதுகாப்பு தினைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


