Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் முன்னெடுப்பு...



கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபியூ திசாநாயக்க அவர்களின் எண்ணத்திலும் கிழக்கு மாகாண வலக்கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வலயங்களின் அதிபர்களுக்கு அறிவூட்டும்  கல்வி மாநாடு திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் சார்பாக பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில இன்று (07); குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபியூ திசாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.


இவ்வாறான மூன்றாண்டு திட்டத்தை அதிபர்கள் மத்தியிலே அறிவூட்டும்  முதலாவது மாநாடு திருகோணமலை கல்வ்p வலயத்திலேயே இடம் பெற்றது. இம் மாநாட்டில் திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர் பொறியியலாளர்  ஆசிரிய ஆலோசகர்கள் பாட இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.














 தேசிய ரீதியாக நடைபெறுகின்ற பரீடசைகளில் எமது மாகாணம் எவ்வாறு முன்னேற்றம் அடைய வேண்டும் மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான காரணம் முதலானவற்றை ஆராய்ந்து சீர் செய்வது தொடர்பான முன்னெடுப்புக்களும் 82 பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். புதிதாக பதவியேற்றுள்ள செயலாள்ரக்கான வரவேற்பும் இதன் போது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.