நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தியதை அடுத்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தியதை அடுத்து பொலீசாரின் தடைகளையும் மீறி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (02) திருகோணமலையில் அமைந்துள்ள சுப்ரா பூங்காவிற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு திருகோணமலை தலைமையக பொலிசாரினால் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைதியான முறையில் தமது கருத்துக்களை தெரிவிக்க அனுமதி கோரி அதனை அடுத்து அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றினை மையமாகக்கொண்டு குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
ஆர்ப்பாட்டம் மக்களின் குரல் எனும் தொனிப்பொருளில் திருுகோணமலை மக்கள் அமைப்பினர் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்
நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் உருவெடுத்து வருகின்ற நிலையில் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற இவ் சூழ்நிலையில் இவ் அரசு ஏற்கனவே அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அவசரநிலைப் பிரகடனத்தை ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதமை இவ் அரசின் சர்வாதிகார போக்கை வெளிக்காட்டியுள்ளதாகவும் இலங்கை வாழ் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தமது பேச்சு சுதந்திரம் தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு அவசர நிலை பிரகடனப் படுத்தியமையானது வன்மையாக கண்டிக்க தக்க விடயம் எனவும் இதன்போது தெரிவித்தார்
மேலும் நாட்டின் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் அதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நாட்டில் பொருளாதார நிலை இவ்வாறு காணப்படும் சூழ்நிலையில் தமது நாட்டு மக்களை சிந்திக்காது இவ்வாறு அரசாங்கம் செயற்படுகின்றது
எனவே பெண்கள் அமைப்பு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் கண்டிப்பதாகவும் இதன்போது சுட்டிகாட்டினர்
