Header Ads

Breaking News
recent

பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 13.4 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 22.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.