கந்தளாயில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கேட்டு வீதி மறியல் போராட்டம்.

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வழங்குமாறு பொதுமக்கள் திருகோணமலை கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் டீசல் வழங்குமாறும் சமையல் எரிவாயு வழங்குமாறும் கண்ணீர் வேண்டாம் கேஸ் வேண்டுமெனவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
ஆர்ப்பாட்டத்தில் கந்தளாய் பொலிஸார் சுமூகமான முறையில் போக்குவரத்துக்கு பாதிப்பு வராமல் பேசி தடுக்க முற்பட்ட போதிலும் பொதுமக்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் வீதியை மறித்து இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
.jpeg)