Header Ads

Breaking News
recent

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்டம்...

ரவ்பீக் பாயிஸ் 
திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்


திருகோணமலை கோணேசபுரி பிரதேசத்தில் அமைந்துள்ள திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று (04) இரவு குறித்த தீப்பந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது


குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் தாக்கப்பட்டு கண்ணீர்புகை விசிரப்பட்டு தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக விடாமல் பொலிசாரினால் தடுத்து நிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளை கண்டித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது


மேலும் அரசாங்கத்திடம் பதிலில்லை, கேஸ் விலை ரொக்கட் விலை மற்றும் பால்மா விலை உயர்ந்தது என்ற கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்


இதேவேளை நாளை நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அத்தியவசிய பொருட்கள் மீதான விலை உயர்வு, மற்றும்,பெட்ரோல்,டீசல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு,தொடர்ச்சியான மின்வெட்டு நீர்வெட்டு இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாகவும் சிறந்த ஜனநாயக அரசை மீள கட்டியமைக்கும் முகமாகவும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் கண்டன பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.