Header Ads

Breaking News
recent

இலங்கை அரசாங்கம் மீள் செலுத்த வேண்டிய கடன்களின் கொடுப்பனவுகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


நிதியமைச்சின் செயலாளரால் இந்த கொள்கை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 12ம் திகதிக்கு முந்திய சாதாரண கடன்கள் அனைத்தும், அவை IMF பொருளாதார மறுசீரமைப்பு திட்டம் ஊடாக மீள்கட்டமைப்பு செய்யப்படும் வரையில் மீள செலுத்தப்படாதன.

வெளிநாட்டு கடன்கள், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் பெறப்பட்டவை போன்ற சாதாரண கடன்கள் அனைத்தும் இதில் உள்ளடங்குகின்றன.

ஆனால் ஏப்ரல் 12க்கு பிந்திய புதிய கடன்களுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகாது எனவும், அவை மீள செலுத்தப்படும் எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Powered by Blogger.