சட்டம் தெரிந்தவர்களும் ஜனாதிபதியை வெளியேற்றுவதற்கு பதாகைகள் ஏந்தி வீதிகளில் போராடுகின்றனர்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு பாராளுமன்ற ஆட்சி சட்டத்தொகுப்பு (யாப்பு) இதை 19 ம் திருத்தத்தில் இருந்து 20 க்கு மாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று வீதிகளில் இறங்கி gottagohome என்ற பதாதைகளோடு வீதியில் நிற்கின்றனர் இவர்களில் சட்டம் தெரிந்தவர்களும் உண்டு.
முழு அதிகாரத்தையும் பாராளுமன்றத்திற்கு அப்பால் உள்ள ஒரு தனி நபர் ஆட்சிக்கு 20வது திருத்தம் என்ற பெயரில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் வாக்களித்து அரசமைப்பை தாரை வார்த்த 156 பாராளுமன்ற உறுப்பினர்களில் அனேகர் இன்று வீதிகளில் இறங்கி பதாதை பிடிப்பதை பார்த்தால் மிகவும் ஆவேசமாக உள்ளது.
சுமார் 19 இல் இருந்த 51 உருப்புரைகளை மாற்றியும் திருத்தியும் 20 ம் திருத்தம் எனும் பெயரில் முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி கையில் கொடுத்து விட்டு இப்போது go home gotta என்று மக்களோடு மக்களாக நின்றுகொண்டிருக்கும் அந்த பாராளுமன்ற உருப்பினர்களையே மக்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.