Header Ads

Breaking News
recent

அரசின் நிதி கட்டமைப்பை கண்டித்து திருமலையில் வைத்திய சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்....



(ரவ்பீக் பாயிஸ்)
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருவதாகவும் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் கூறி அரசுக்கு எதிராக சுகாாதா வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (28) திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை தள வைத்தியசாலை வளாகத்திலிிருந்து ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக நீதிமன்ற வீதியினூடாக தபால் அலுவலகம் வந்தடைந்து திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்தது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டா நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு அமெரிக்காவுக்கு நீ ஓடு,மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்் மற்றும் இட்டுகம நிதியின் மிகுதி 1.5 மில்லியன் எங்கே? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.