Header Ads

Breaking News
recent

மே 09 காலிமுகத்திடல் கலவரம் தொடர்பில் 230 சந்தேக நபர்கள் கைது...



மே 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 230 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

இவர்களில் 68 சந்தேக நபர்கள் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்கள் உட்பட இதுவரை 707 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காலி முகத்திடல் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் 170 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் மேலும் பல சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Powered by Blogger.