ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் விடுவிப்பு...
பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட 14 இளைஞர்கள் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சார்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
இந்த கைது நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை அழைப்பதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
