Header Ads

Breaking News
recent

துப்பாக்கிச் சூடு - 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர்.

சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 18 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.