Header Ads

Breaking News
recent

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேரும் திருமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைப்பு....



ரவ்பீக் பாயிஸ்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேரை கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் திருகோணமலை கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையில் நேற்றிரவு (18) கிழக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளதுடன்.

கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் இவ்வாறு சட்டவிரோதமாக
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேரில் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் நாளை 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.