Header Ads

Breaking News
recent

மூதூர் பிரதேசத்திற்கு 4000 Tom EJC மாமரக் கன்றுகள்  வழங்கிவைப்பு...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் Development of Export Agri Zone logis எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 4000 Tom EJC மாமரக் கன்றுகள் வழங்கப்பட்டது.


நிகழ்வு இன்று (13) மூதூர் பிரதேச செயலகத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி. எம். முபாரக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னர் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கிணங்க Development of Export Agri Zone logis எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேசத்திற்கு குறித்த 4000 Tom EJC மாமரக் கன்றுகள் வழங்கப்பட்டன.



இவ் பயிர்ச்செய்கையினை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த அறுவடையை பெறுவதுடன் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடியதாக அமையும். இந்த இன மாம்பழத்திற்கு சந்தையில் சிறந்த கேள்வி காணப்படுவதுடன் ஒரு கிலோ மாம்பழம் ரூபா 350 முதல் ரூபா 450 விலைகளிடையே விற்பனை செய்யப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ். நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச சபை உரிப்பினர்கள்் உட்்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.