Header Ads

Breaking News
recent

ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டு மக்கள் எழுச்சி இடம்பெற்று வருகின்றது. இதனால் முன்னதாக மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.