நாளையதினம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திதிற்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு
அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக நாளை (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
