கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 23 ம் திகதி முதல் நடைப்பெறவுள்ளதுடன் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திளுக்கு தபாலிலும் அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது.
அனுமதி அட்டை மே 12 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காதவர்கள் பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அனுமதி அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.