முப்படையின் கவனயீனம் குறித்து ஆராய குழு நியமனம்

கடந்த மார்ச் 31ஆம் திகதி மிரிஹான சம்பவம் மற்றும் மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவத்தின் போது முப்படையினரின் கவனயீனம் ஏதும் இடம்பெற்றதா என ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த பீல்ட் வசந்த கரன்னாகொட, முன்னாள் விமான படை தளபதி மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க உள்ளிடோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.