ரணிலுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பிற்பகல் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.