Header Ads

Breaking News
recent

திருமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஸ்யநாட்டு பிரஜை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...




அப்துல் சலாம் யாசீம் 
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இன்று (13) மதியம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது


குறித்த விபத்தில் ரஷ்யா நாட்டு பிரஜையான பி.பி.ஏ.ஏ தமித்திரி (வயது-28) எனவும் குறித்த ரஷ்ய நாட்டு பிரஜை திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும் இன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது முச்சக்கர வண்டி குறுக்கருத்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த ரஷ்ய நாட்டு பிரஜை திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.