Header Ads

Breaking News
recent

திருமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிப்பு...



ரவ்பீக் பாயிஸ் 

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

திருகோணமலை சிவன் கோவில் ஆலயத்தின் முன்றலில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷ இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நாள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாற்றில் இடம் பிடித்த ஒரு நாள் எனவும் 

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி யுத்தத்தின்போது தங்குவதற்கு இடமில்லாமல் உண்பதற்கு உணவில்லாமல் தவித்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் திருகோணமலை சிவன் கோவில் வளாகத்தில் உப்புக் கஞ்சி காய்ச்சி அவர்களை நினைவு கூறுகின்றோம் என தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவித்த இந்த தினத்தினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் நோக்கிலும் அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடையம் இன்றைய தினம் திருகோணமலை சிவன் கோவில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷ தெரிவித்தார். 












Powered by Blogger.