கிழக்கில் Covid - 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் : கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்...
ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாணத்தில் கோவிட் - 19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்ட பரீட்சையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற இருப்பதினால் கிழக்கு மாகாணத்தில் நான்கு கல்வி மாவட்டங்களான திருகோணமலை,மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை அகிய கல்வி மாவட்டங்களை மையமாகக்கொண்டு நான்கு பிராந்திய இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஆளணியினரும் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்.
இவ்வருட க.பொ.த.சாதாரணதர பரிட்சைக்கு கிழக்கு மாகாணத்தில் 53 இணைப்பு நிலையங்களும் 407 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகலாக 22805 மாணவர்களும், சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகலாக 6077 மாணவர்களும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 28882 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற உள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
குறித்த பரிட்சைக்கு கடமைகளுக்காக 2340 அதிபர்,ஆசிரியர்கள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்
மேலும் கோரோன தொற்று காரணமாக மாணவர் ஒருவர் பரிட்சை எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தனியான ஒரு பரீட்சை நிலையம் அமைக்க முடியாத பட்சத்திலும் குறித்த தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒன்றில் குறித்த மாணவர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக ஏற்பாடுகளும் ஆளணிகளும் தயார் நிலையில் இருப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
