Header Ads

Breaking News
recent

40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Trinco Boys விளையாட்டுக்கழகம் சம்பியன்..



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Trinco Boys விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.


திருகோணமலையில் நேற்று (11) நடத்தப்பட்ட 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Trinco Boys விளையாட்டுக்கழகம் சம்பியனாகவும்,ஜமாலியா விளையாட்டுக்கழகம் ரன்னஸ் ஆகவும் தெரிவுசெய்யப்பட்டது.



சம்பியன் அணியாக தெரிவுசெய்யப்பட்ட Trinco Boys அணிக்கு சம்பியன் வெற்றிக்கிண்ணமும் ரூபா 50,000 பணப்பரிசும் ரன்னஸாக தெரிவுசெய்யப்பட்ட ஜமாலியா விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும் ரூபா 25,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.


குறித்த சுற்றுப்போட்டியில் சிறந்த வீரர்,சிறந்த கோல் காப்பாளருக்கு தலா ரூபா 5000 பணப்பரிசு வீதம் வழங்கப்பட்டது.


இச் சுற்றுப்போட்டியை கனடாவில் இருந்து வந்திருந்த திருகோணமலையின் சிறந்த உதைபந்தாட்ட,கிரிக்கெட் வீரருமான டேமியன் மத்தியூஷ், ராஜன் ஆகியோர் இணைந்து வெகுசிறப்பாக நடத்தியதுடன்.



இச்சுற்றுப்போட்டியின் பிரதம விருந்தினராக திருகோணமலை உதைபந்தாட்டச்சங்கத்தின் முன்னைநாள் தலைவர் திரு.ஜெயசங்கர் மற்றும் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் அதிபர் றெமன்சோதி ஜெறோம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.