Header Ads

Breaking News
recent

உங்கள் பிரதேசத்தில் எரிபொருள் எவ்வளவு விநியோகிக்கப்படும் : எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம் பெரும் என்பன தொடர்பில் செயலி அறிமுகம்....



இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



அதிகாரிகளின் கூற்றுப்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருள் தொடர்பான ஏனைய தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். அதன் பின் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு முறை இணையதளம் பதிவேற்றம் புதுப்பிக்கப்படும்.

இணையத்தளம்: https://fuel.gov.lk/
Powered by Blogger.