தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : ஒருவருக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்
எரிபொருள் போதிய அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், தொடர்ந்தும் எரிபொருளுக்கான வரிசை நீள்கிறது என எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிப்பதாலேயே, இந்த நிலைமை ஏற்படுவதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் முதல் புதிய எரிபொருள் வழங்கும் நடைமுறை ஒன்றை பின்பற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எரிபொருள் நிலையங்களில் அனைத்து வாடிக்கையாளர்களையும் பதிவு செய்து ஒருவாரத்துக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படும்.
உத்தரவாத அடிப்படையில் ஒரு வாரத்துக்கான எரிபொருளை இந்த நடைமுறையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
