Header Ads

Breaking News
recent

திருகோணமலை வலய சதுரங்கப் போட்டியில் திருமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடம் : மாகாண மட்டத்திற்கும் தெரிவு...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது


இன்று (16) இடம்பெற்று திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியிலேயே ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பிடித்தது

இன்று இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவான திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மற்றும் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது.


மேலும் இன்று இடம்பெற்ற சதுரங்கப் போட்டிகளில் 17 வயது மற்றும் 20 வயதுப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.