Header Ads

Breaking News
recent

திருமலையில் பொலிசரினால் கடற்கரையில் சிரமதான பணி முன்னெடுப்பு...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கரையோரப் பிரதேசங்களை அண்டிய கடற்கரைகளில் பொலிசாரின் தலைமையில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


திருகோணமலை மாவட்ட ரேஞ்ச் டி.ஐ.ஜி லயனல் குணதிலக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரகத் மனகே அவர்களின் தலைமையில் இன்று திருகோணமலை பிரதான கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது.


திருகோணமலை கடற்கரை பிரதேசத்தில் கரையோரங்கள் மற்றும் கடலில் வீசப்படும் கழிவு பொருட்கள் கடற் கரையில் ஒதுங்கி கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுகின்றமையினால் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் மண்ணில் மக்கக்கூடிய பொருட்கள் என பிரித்து சேகரிக்கப்பட்டதுடன் குறித்த சிரமதானப் பணியில் திருகோணமலை தலைமையகம் மற்றும் துறைமுக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 65 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் திருகோணமலை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த சிரமதான பணி திருகோணமலை நகரை அண்டியுள்ள பிரதான கடற்கரை, துறைமுக வீதியை அண்டிய கடற்கரை, ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை மற்றும் மட்டுகழி பிரதேசத்தை அண்டிய கடற்கரைப் பிரதேசங்கள் என்பன இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டது..


குறித்த சிரமதானப் பணியில் திருகோணமலை - 01 உதவி பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் விதானகே, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்ன, திருகோணமலை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சமீஸ் சனீஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஊர்மிலா,கிராம உத்தியோகத்தர் மற்றும் திருகோணமலை மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து குறித்த சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.