இலங்கை விமானப்படையின் திருமலை அனர்த்த பிரிவிற்கு படகு இயந்திரம் வழங்கிவைப்பு....
ரவ்பீக் பாயிஸ்
இலங்கை விமானப்படையின் திருகோணமலை அனர்த்த பிரிவுக்கு படகு இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் திருகோணமலை முகாமின் விமானப்படை அனர்த்த பிரிவுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான பி.எச்.என்.ஜெயவிக்ரம அவர்களினால் மாவட்ட செயலகத்தில் இன்று (07) குறித்த படகு இயந்திரம்
வழங்கி வைக்கப்பட்டது.
25 குதிரை சக்தி கொண்ட இந்தப் படகின் இயந்திரம் இலங்கை விமானப்படையின் அனர்த்தப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் இலங்கை விமானப்படை முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், அந்த முயற்சிக்கு உதவுவதற்காக இந்த இயந்திரத்தை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான பி.எச்.என்.ஜெயவிக்ரம வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.கே.சுஹுனதாஸ் மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


