சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய தபால் முத்திரை : இதன் உண்மைத்தன்மை என்ன?
இலங்கை முத்திரைப் பணியகத்தினால் வெளியிடப்பட்டதாகக் கூறி ஒரு முத்திரையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பரவி வரும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவதற்காக முத்திரைப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளரை இலங்கை பத்திரிகை நிறுவனம் தொடர்பு கொண்டபோது. அதன்போது அத்தகைய முத்திரை எதுவும் முத்திரைப் பணியகத்தால் வெளியிடப்படவில்லை என்று முத்திரைப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போலியான பதிப்பு என்றும் அவர் கூறினார்.
இதன்படி, முத்திரைப் பணியகத்தால் வெளியிடப்பட்ட முத்திரை என பரவி வரும் முத்திரையின் புகைப்படமானது நையாண்டியாகத் திருத்தப்பட்டுள்ளது என்பதை முத்திரைப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்துகிறார்.



