Header Ads

Breaking News
recent

நாட்டில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்தது....



இன்று அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவாலும், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த விலை அதிகரிக்கப்பிற்கு அமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு....

பெற்றோல் (Octane 92) - Rs. 470.

பெற்றோல் (Octane 95) - Rs. 550.

ஒடோ டீசல் - Rs. 460.

சூப்பர் டீசல் - Rs.520.
Powered by Blogger.