ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் விபத்து - இருவர் பலி
கொழும்ம்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி தொடருந்துடன் மோதி கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார். தெரிவித்தனர்
அரியாலை நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் தொடருந்துடன் மோதியதனாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து இன்றிரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் காரில் பயணித்த தென்னிலங்கை பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.


