கந்தளாய் வலய பாடசாலைகள் வழமைபோல் இடம்பெற்றது : கிழக்குமாகாண ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர்
நாட்டில் உள்ள நகர்ப்புர பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் இடம்பெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா அறிவித்ததை அடுத்து கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் இடம்பெற்றது.
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலவந்தமாக கிழக்கு மாகாண பாடசாலைகளை திறந்து 85 வீதமான பாடசாலைகள் வழமை போல் இடம்பெறுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருக்கின்றமை வெளிவந்தது இவ்வாறு இருக்கையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகள் நடைபெற்ற போதும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்ததாக காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருகோணமலை கந்தளாய் வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இன்றையதினம் கந்தளாய் வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று இடம்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
.jpg)