மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை திருமலையில்
அப்துல் சலாம் யாசீம்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு, கிண்ணியா வலய மாணவர் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இலவச போக்குவரத்துக்காக இரு பஸ்கள் நாளை (27) முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.
அல் ஹிக்மத் உம்மா பவுண்டேஷன் அனுசரனையுடன் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தினால் இந்த சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது பஸ் சேவை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து நடுவூற்று, ஊடாக வான்எல செல்வதற்கும், இரண்டாவது பஸ் சேவை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து முள்ளிப்பொத்தானை வரை செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை ( 27.06.2022) காலை 6.45 இற்கு இரு பஸ்களும் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக சேவையை தொடர உள்ளது.
மீண்டும் பாடசாலை முடிவுற்ற பின் இறுதியாக பஸ் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து கிண்ணியாவிற்கான பஸ்சேவை நடைபெறும்
