இன்று 30.07.2022 திருமலை நகரில் 1000 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது : விபரம் உள்ளே...

இன்று (30) திருகோணமலை நகர் பிரதேசத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் திருகோணமலை கடற்கரைக்கு அண்மையில் ( சங்கமித்த) பிரதேசத்தில் 1000 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமது மின் கட்டண பட்டியலினை சமர்ப்பித்து தமக்கான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளுமாறு திருகோணமலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.