Header Ads

Breaking News
recent

எரிபொருள் பதுக்கியவருக்கு 3வருட சிறை...


எரிபொருளை மறைத்து வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தினால் நபர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் சம்பவம் பதிவாகியுள்ளது.

5,813 லீற்றர் சுப்பர் டீசல் மற்றும் 1,540 லீற்றர் பெற்றோலை நுகர்வோருக்கு வழங்காமல் மறைத்து வைத்த குற்றத்திற்காக குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இதன்படி, குறித்த குற்றவாளிக்கு மூன்று மாத இடைநிறுத்தப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனையை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அநுராதபுரம் நீதவான் குற்றவாளிகளுக்கு அறிவித்துள்ளார்.
Powered by Blogger.