Header Ads

Breaking News
recent

"தேர்ச்சி மையக் கணிப்பீட்டிற்கான தரவுத்தள அங்குரார்ப்பன நிகழ்வும் மற்றும் விரைவுச் சேவை வழங்கல் மையத் திறப்பு விழாவும்."



இன்று (2022.07.01) திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் S. சிறீதரன் அவர்களது தலைமையில் அலுவலகக் கேட்போர் கூடத்தில் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரனையில் திருகோணமலை வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளில் தரம் 3 முதல் 11 வரையில் கற்கும் மாணவர்களின் சுயவிபரங்கள், கற்றல் அடைவு மட்டக் கணிப்பீடுகள் போன்றவைகளை இணையத்தில் பதிவு செய்யும் நிகழ்வும் மற்றும் சேவை நாடிகள் தத்தமது தேவை நிமித்தம் அலுவலகத்தை நாடி வரும் வேலையில் அவர்களது தேவைகளை இனங்கண்டு உடன் பதில் வழங்கும் முகமாக வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களது ஏற்பாட்டில் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விரைவுச் சேவை வழங்கல் மையத் திறப்பு விழாவும் பிரதம அதிதியக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திசாநாயக்க அவர்கள் குறித்த தேர்ச்சி மையக் கணிப்பீடுகளைப் பதிவு செய்யும் தரவுத்தளத்தினை அங்குரார்ப்பனம் செய்து வைத்ததுடன், அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விரைவுச் சேவை வழங்கல் மையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.




குறித்த நிகழ்விற்கு பிரதி, உதவிக்கல்விப் பணிப்பாளர்களும் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்கள் போன்றோர்களும் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்துடன், அதிபர்களுக்கு இது விடயமாக விழிப்புணர்வும் ஊட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.