Header Ads

Breaking News
recent

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வேளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்...



தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஏழு முக்கிய அறிவிப்புகள்.தேசிய எரிபொருள் அட்டை நாளை முதல் அமலுக்கு வந்தாலும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் வாகன இறுதி இலக்க அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் நடைமுறையிலிருக்கும்.
ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பிறகு எரிபொருள் அட்டை மாத்திரமே அமலில் இருக்கும். வாகன இறுதி இலக்கம் உள்ளிட்ட முறைமைகள் எதுவும் இல்லாது செய்யப்படும்
QR குறியீடு ஸ்கேனர் வசதி இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க முடியும்.
வெவ்வேறு வாகனங்களை வியாபார பதிவு இலக்கத்தின் கீழ் பதிவு செய்ய, வார இறுதி நாட்களில் அனுமதி வழங்கப்படும். பிரதேச செயலகங்கள் மின்பிறப்பாக்கி உள்ளிட்ட சாதனங்களுக்கான எரிபொருளை பதிவு செய்து கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
ஒகஸ்ட் 1க்கு முன், அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களும் QR குறியீடை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்தப்படுவதுடன் மக்கள் அனைவரும் தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக முச்சக்கர வண்டிகளுக்கு ஒவ்வொரு எரிபொருள் நிலையத்தை குறித்தொதுக்கி பதிவு செய்ய அனுமதிக்கபடுவதுடன், போக்குவரத்து அமைச்சின் ஊடாக பேருந்துகளுக்கு பேருந்துசாலைகள் அல்லது எரிபொருள் நிலையம் ஒன்றை குறித்தொதுக்கி பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட துறையினருக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முறையினை பதிவு செய்து கொள்வதற்கும் அந்தந்த துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.