அல்-ஹித்மதுல் உம்மாஹ் பௌண்டேசனினால் புனர்நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைகளும் பாடசாலை தளபாடங்களும் கையளிப்பு...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிண்ணியா நடுஊற்றில் அமைந்துள்ள தி/கிண்ணியா அல்-அஹ்லா வித்தியாலயத்தின் வகுப்பறைகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான அல்-ஹித்மதுல் உம்மாஹ் பௌண்டேசனினால் தி/கிண்ணியா அல்-அஹ்லா வித்தியாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலை தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய தளபாடங்களும் வழங்கப்பட்டன.
அதேநேரம், பாடசாலை வகுப்பறைகளுக்கான மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் நிறப்பூச்சுகளும் செய்துகொடுக்கப்பட்டன.அத்துடன் பாடசாலை விடுதிக்கான ஜன்னல் கதவுகளும் பொருத்திக் கொடுக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



