Header Ads

Breaking News
recent

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது : ஐ. நா...



ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிமை உண்டு எனவும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலையில் ஜனாதிபதி செயலக பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Hanaa Singer-Hamdy ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், காலி வாய்ப் போராட்டக்காரர்களை கலைக்க பலாத்காரத்தைப் பிரயோகிப்பது குறித்து ஐ.நா வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைதியான போராட்டங்களை நடத்தும் உரிமையை நசுக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை மேலும் மோசமடையக்கூடும் என Hanaa Singer-Hamdy அந்தச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Powered by Blogger.