எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டாயம் ஜெனரேட்டர் இருக்க வேண்டும் : முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்...
முறையிடுவதற்கான தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் மின்சாரத் தடை ஏற்படும் போது, அதிகமான எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தேவ பிரியவுடன் பேசியபோது; “மின்சாரத் தடை ஏற்படுமாயின், கட்டாயமாக மின்பிறப்பாக்கிகளை – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பயன்படுத்த வேண்டும்” என கூறினார்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசைகளில் பல நாட்களாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மின்சார தடை ஏற்படும் போது – பல எரிபொருள் நிலையங்கள் ‘மின்சாரம் இல்லை’ என்கிற பதாகையினை காட்சிப்படுத்தி விட்டு மூடப்படுகின்றன. இதனால் வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்கள் மேலும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, மின்சாரத் தடை ஏற்படும் போது எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து – பிராந்திய காரியாலயங்களுக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலங்கங்கள் கீழே....


