கொழும்பு ரயில் சேவைகள் முற்றாக முடக்கம்....
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு இன்றைய தினம் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் போக்குவரத்து பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் ஊடாக ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
