கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் சஜித் பிரேமதாச கண்டனம்....
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது இன்று அதிகாலை தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இன்றைய தினம் அவர்கள் குறித்த இடத்திலிருந்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறத் தீர்மானித்திருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
